சொதப்பிய கே.எல்.ராகுல், பண்ட்..தனியாளாக 132 ஓட்டங்கள் விளாசிய துருவ் ஜுரெல்
தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரெல் 132 ஓட்டங்கள் விளாசினார்.
சாய் சுதர்சன், கே.எல்.ராகுல் சொதப்பல்
பெங்களுரூவில் இந்தியா ஏ மற்றும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 
இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 255 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான அபிமன்யூ ஈஸ்வரன் ஓட்டங்கள் எடுக்காமலும், கே.எல்.ராகுல் 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த படிக்கல் (5), சாய் சுதர்சன் (17), ரிஷாப் பண்ட் (24) ஆகியோரும் சொதப்பினர். ஆனால் துருவ் ஜுரெல் (Dhurv Jurel) அபாரமாக ஆடி சதம் அடித்தார்.
ஜுரெல் 132 ஓட்டங்கள்
கடைசி வரை களத்தில் நின்ற ஜுரெல் 175 பந்துகளில் 4 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 132 ஓட்டங்கள் குவித்தார். தியான் 4 விக்கெட்டுகளும், டசிபோ மற்றும் சுப்ராயன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 221 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அணித்தலைவர் அக்கர்மன் 118 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 134 ஓட்டங்கள் விளாசினார். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
34 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |