உங்க வீட்டு பக்கத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்து இருக்கே! இனியும் கவலை வேண்டாம்
இன்றைய சூழலில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தாக்கும் நோய்களில் ஒன்றாகிவிட்டது சர்க்கரை நோய்.
கணையத்தில் இன்சுலின் சுரக்காத நிலையையே சர்க்கரை நோய் என்கிறோம், சர்க்கரை நோய் இருப்பதை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் நோயின் தீவிரத்தை குறைக்கலாம்.
இந்த பதிவில் சர்க்கரை நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் நித்தியகல்யாணி செடியின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சுமார் 1 மீட்டர் வரை செங்குத்தாக வளரக்கூடிய நித்திய கல்யாணி செடியின் அனைத்து பாகங்களும் மருந்தாகிறது, இதன் மலர்கள் பார்ப்பதற்கு வசீகரிக்கும் நிறத்துடன் ஐந்து இதழ்களை கொண்டது.
நிலங்கள், சாலையோரங்களில் ஏன் உங்கள் வீட்டின் அருகில் கூட இந்த செடி காணப்படும், பலரும் அழகுக்காவும் நித்திய கல்யாணி செடியை வளர்க்கின்றனர்.
எப்படி பயன்படுத்தலாம்?
நித்தியகல்யாணி செடியின் வேரை துண்டு துண்டாக நறுக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும், இந்த பொடியை ஒரு டீஸ்பூன் அளவு சுடுதண்ணீரில் கலந்து குடிக்கவும், ஒரு நாளைக்கு இரண்டு வேளை அல்லது மூன்று வேளை என தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
நித்தியகல்யாணி பூவின் 15 பூக்களை 200 மிலி நீரில் போட்டு பாதியாக சுண்டும் படி காய்ச்ச வேண்டும், இதனை தினமும் நான்கு வேளைகள் 25 மிலி அளவு சாப்பிட்டு வர சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும், உடல் அசதியையும் நீக்குகிறது.