சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கனுமா? இந்த மூலிகை இலைகள் ஒன்றே போதுமாம்
ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படுகின்றது நீல எருக்கு இலைகள். இந்த இலையை Giant Calotrope என்றும், இதன் அறிவியல் பெயர் Calotropis Gigantea என்றும் அழைக்கப்படுகிறது.
நீல எருக்கு இலைகள் மென்மையாகவும், அதன் நிறம் லேசான பச்சை நிறமாகவும், சற்று வெண்மையாகவும் இருக்கும், ஆனால் காய்ந்தவுடன் இந்த இலை மஞ்சள் நிறமாகத் தோன்றும்.
இந்த இலைகள் குளுக்கோஸ் அளவைக் குறைத்து சர்க்கரை நோயை குறைக்க உதவுவதாக கூறப்படுகின்றது. தற்போது இது எப்படி என்பதை பார்ப்போம்.

எப்படி உதவுகின்றது?
நீல எருக்கு இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும், அதன் நுகர்வு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றது.
எவ்வாறு பயன்படுத்துவது? 
இந்த இலைகளை வெயிலில் காயவைத்து பின் அரைத்து பொடி வடிவில் எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்தப் பொடியை தினமும் 10 மில்லி தண்ணீரில் கலந்து குடிக்கவும்.
மற்றொரு வழி, இரவில் அதன் பொடியை உள்ளங்காலில் வைத்து, சாக்ஸ் அணிந்து தூங்கச் செல்லுங்கள்.
காலை வேளையில் சாக்ஸ்களை கழற்றி, இப்படி செய்து வந்தால், சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.
மற்ற நன்மைகள்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க மட்டுமே இந்த இலைகளைப் பயன்படாது.
பல் வலி பிரச்சனைகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது மூட்டு வலி இருந்தாலும் பயன்படுத்தலாம்.
குறிப்பு
நீல எருக்கு இலையில் இருந்து வெண்மையான பால் வெளிவருகிறது, இது கண்களுக்கு சற்று ஆபத்தானது, எனவே இந்த இலையைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள், மேலும் இலைகளை குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைக்கவும்.   
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        