சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்! ஏன் தெரியுமா?
இரத்த சர்க்கரை அல்லது குளுக்கோஸ் அளவு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இயல்பு அளவு விட அதிகமாக இருக்கும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ரொட்டிகள், அரிசி உணவுகள், பாஸ்தா, பழங்கள், பால் மற்றும் இனிப்பு போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகமாக எடுத்து கொள்வது நீரிழிவு ஏற்பட காரணமாக இருக்கலாம்.
நீரிழிவு நோய் இருக்கும் போது சாப்பிட சிறந்த உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது சற்றே கடினமான ஒன்றாக இருக்கும். ஏனென்றால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதே நீரிழிவு நோயாளிகளின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
நீரிழிவு நோய் இருக்கும் போது சாப்பிட சிறந்த உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது அவசியம். சரி வாங்க சர்க்கரை நோயாளிகள் என்ன உணவுகளை கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்..
- நீரிழிவு நோயால் உண்டாகும் இதய நோய் உள்ளிட்ட சிக்கல்களை தடுக்க உதவும் உணவுகளை சாப்பிடுவதும் முக்கியம். காய்கறிகள், பழங்கள் மற்றும் ஆரோக்கியமான புரதங்கள் நிறைந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தரும்.
- சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு உள்ளிட்ட எண்ணற்ற பாரம்பரிய சிறுதானியங்கள் சாப்பிடும் பழக்கம் மீண்டும் திரும்பி உள்ளது. நீரிழிவு நோயாளிகள் சிறுதானியங்களை தங்கள் டயட்டில் சேர்த்து கொள்வது அவர்களின் ரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுகிறது.
- நாளொன்றுக்கு 2 பாதாம்களை சாப்பிடுவது குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோய்க்கு முந்தைய கட்டத்தில் இருப்பவர்கள் தினசரி பாதாம்களை சாப்பிட்டு வருவது அவர்களது ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவலாம்.
-
அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளிட்ட பல, பச்சை இலை காய்கறிகளில் அடங்கி இருக்கின்றன. கீரை, முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் ரத்த சர்க்கரை அளவை நார்மலாக வைக்க உதவுகின்றன.