சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
ஏதேனும் நோய்களால் பாதிக்கப்பட்டால் அவர்கள் என்ன வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த கேள்விகள் அதிகம் இருக்கும், அதிலும் அவர்கள் முட்டையை சாப்பிடலாமா வேண்டுமா..? போன்ற கேள்விகள் தோன்றுவது இயல்பே.
முட்டையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சாப்பிடும் உணவு நிச்சயம் மருந்தாக நம் உடலுக்கு அமைய வேண்டும்.
முட்டையில் பல ஊட்டசத்துக்கள் உள்ளன. அதிக புரத சத்து, நிறைய கலோரிகள், 13 முக்கிய வைட்டமின்கள் போன்றவை இதில் காணப்படுகிறது. ஒரு முட்டையில் சராசரியாக கீழ்கண்ட ஊட்டசத்துக்கள் இருக்கிறதாம்..! கலோரிகள் - 70 புரதம் - 6 g சொலின் - 250 mg ஒமேகா 3 வைட்டமின் எ, பி, டி, இ இதில் மிக முக்கிய குறிப்பு என்னவென்றால், இன்சுலின் அளவை முட்டை நன்கு உயர்த்துகிறது.
சர்க்கரை நோயாளிகள் முட்டையை அவர்களது உணவில் எடுத்து கொள்ளலாம். ஆனால் அவற்றின் அளவு மிக முக்கியம். அதோடு மஞ்சள் கருவை உண்ணலாமா..? இல்லை வெள்ளை கருவை உண்ணலாமா..? என்பது அடுத்த கேள்வியாக உங்கள் மனதில் இருப்பதை நான் உணர்வேன் .
சர்க்கரை நோயாளிகள் மஞ்சளை காட்டிலும் வெள்ளை கருவை சாப்பிடுவதே உகந்தது. வேண்டுமென்றால் மருத்துவரை ஆலோசித்து விட்டு இந்த இரண்டையும் சாப்பிடலாம். ஏனெனில் இவை இரண்டிலும் முக்கிய சத்துக்கள் உள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி பல வித நோய்கள் தாக்க கூடும். இதற்கு முதல் காரணம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். ஆனால், முட்டை சாப்பிடும் நோயாளிகளுக்கு இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், லுடீன், அதிக எதிர்ப்பு சக்தியை தரும். அத்துடன் உடல் சோர்வை போக்கி வலிமை தரும்.