சர்க்கரை நோயாளிகள்! இந்த மூன்று உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க.. ஆபத்தை ஏற்படுத்துமாம்
பொதுவாக இன்றைய காலத்தில் இப்போது பலரையும் வாட்டக்கூடிய நோய் தான் சர்க்கரை நோய். ஒரு காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய் என்று கூறப்பட்ட சக்கரை வியாதி நோய், இன்று எந்த பேதங்களும் இல்லாமல் மனிதர்கள் அனைவரையும் பிடிக்கிறது.
உயிரியல், வாழ்க்கை முறை, கலாச்சாரம், சமூக பொருளாதார நிலை, மரபியல், ஊட்டச்சத்து காரணிகள் மற்றும் பாலியல் ஹார்மோன்கள் ஆகியவற்றில் சிக்கல் இருந்தால் நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
ஆனால்,தற்போது முறையற்ற சில உணவுகள் கூட நீரிழிவு நோயை உண்டாக்குகின்றது. அந்த உணவுகளை முடிந்தவரை தடுப்பது நல்லது. தற்போது அந்த உணவுகள் என்ன எனபதை பார்ப்போம்.
இனிப்பான சோடா வகைகள்
இனிப்பான சோடா வகைகள் டைப் 2 நீரிழிவு ஆகியவை ஏற்படுத்தும் எனவே, நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இனிப்பு மிகுந்த சோடா பானங்களை தவிர்ப்பது நல்லது. இவற்றுக்கு பதிலாக க்ரீன் டீ அருந்தலாம்
உருளைக்கிழங்கு
நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை எந்த வடிவத்தில் உட்கொண்டாலும் அது உடலுக்கு தீங்கை உண்டாக்குகிறது. உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச்சில் க்ளுகோஸ் மிக அதிகமாக உள்ளது. இந்த ஸ்டார்ச் இரத்த ஓட்டத்தில் விரைவாக உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே, உருளைக்கிழங்கிற்கு நோ சொல்லவும்.
பிரட்
வெள்ளை பிரட் மைதா கொண்டு தயாரிக்கப்படுவதால் இதில் நார்ச்சத்து மற்றும் ஊட்டசத்துகள் மிக குறைவாக இருக்கும். பிரெட் இன்சுலின் வெளியீட்டை ஊக்குவித்து இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும்.
நீரிழிவு நோயாளிகள் வெள்ளை பிரெட்டுக்கு , மாற்றாக மல்டி கிரைன் பிரட் அல்லது கோதுமை பிரட் உட்கொள்ளலாம். இப்போது ராகி பிரட்டும் கடைகளில் கிடைக்கிறது. அதோடு, பிரட் உடன் காய்கறிகள் , பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.