நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு! அவசியம் இந்த பழங்களில் ஒன்றை தினமும் கட்டாயம் எடுத்து கொள்ளுங்க
பொதுவாக பழங்களைச் சாப்பிடுவதால், சர்க்கரை அளவைக் குறைப்பது முதல் உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவது வரை பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஏனெனில் அவற்றின் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால் இது சாத்தியமாகிறது.
பழங்களில் வைட்டமின்கள் A, B, C, E, மற்றும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார் சத்து நிறைந்துள்ளதாக உள்ளன.
எனவே தினமும் ஒரு பழமாவது எடுத்து கொள்வது நீரிழிவு நோயாளிக்கு நல்லது. அந்தவகையில் நீரிழிவு நோயாளிகள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- ஆப்பிள்கள் சத்தானது என்பதோடு, வயிறு நிறையும் வகையிலான உணவாக உள்ளது. இது டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்தை பெருமளவு குறைக்கிறது.
- ஆனைக்கொய்யாவில் அதிக நார்ச்சத்து உள்ளது. நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதில் சிறந்த பங்காற்றுகிறது.
- நீரிழிவு நோய்க்கு உகந்த உணவில் பெர்ரிகளைச் சேர்ப்பது சிறந்த பலனைத் தரும். ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றிலிருந்து எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
- பப்பாளி இயற்கையான ஆக்ஸிஜனேற்றம் கொண்ட சத்துக்களால் நிறைந்துள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான தேர்வாக அமைகிறது.
- நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளவர்களுக்கும் சக்திவாய்ந்த நீர்ச்சத்து பழங்கள், தர்பூசணி மற்றும் முலாம்பழம் மிகவும் சிறந்தது.
- பேரிக்காயை உட்கொள்வது டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.
- ஆரஞ்சு இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தை குறைக்க உதவுகிறது, மேலும் இதில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.