நான்கு வைரக்கம்மல்களைத் திருடிவிட்டு தப்பிய நபர்: எக்ஸ்ரேயில் தெரிந்த காட்சி
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில், 770,000 டொலர்கள் மதிப்பிலான நான்கு வைரக்கம்மல்களைத் திருடிவிட்டு தப்பியோடினார் ஒருவர்.
எக்ஸ்ரேயில் தெரிந்த காட்சி
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில், 770,000 டொலர்கள் மதிப்பிலான நான்கு வைரக்கம்மல்களைத் திருடிவிட்டு தப்பியோடினார் ஒருவர். இலங்கை மதிப்பில், அது 22,81,67,863.00 ரூபாய் ஆகும்.
அவரது வாகனத்தை ட்ராக் செய்த பொலிசார், வாஷிங்டனில் அவரைக் கைது செய்தார்கள்.
திருடிய நகை எங்கே என்று கேட்டால், அதை தான் ஜன்னல் வழியாக வீசியிருக்கலாம் என்று கூறியுள்ளார் அவர்.
பின்னர் பொலிசார் அவரை சிறைக்கு அழைத்துச் செல்ல, என் வயிற்றிலிருக்கும் நகைகளுக்காக என் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வீர்களா என்று கேட்டுள்ளார் அவர்.
அதைத் தொடர்ந்து அவருக்கு எக்ஸ்ரே எடுத்த பொலிசார், அவர் திருடிய கம்மல்கள் அவரது வயிற்றுக்குள் இருப்பதைக் கண்டுள்ளார்கள்.
பின்னர் அந்தக் கம்மல்கள் மீட்கப்பட்ட, தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் அந்த நபர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |