பிரான்ஸ் ஹொட்டல் ஒன்றில் மாயமான விலையுயர்ந்த வைர மோதிரம்: எங்கு கிடைத்தது தெரியுமா?
மலேசியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது, அவரது விலையுயர்ந்த வைர மோதிரம் ஒன்று மாயமானது.
மாயமான விலையுயர்ந்த வைர மோதிரம்
பெயர் குறிப்பிடப்படாத அந்த மலேசிய சுற்றுப்பயணி பாரீஸிலுள்ள பிரபல ரிட்ஸ் ஹொட்டலில் தங்கியிருந்தபோது, தனது மோதிரம் ஒன்றைக் கழற்றி மேசையில் வைத்துவிட்டு, ஷாப்பிங் சென்றுவிட்டார்.
Stock image
அவர் திரும்பிவந்தபோது அவரது மோதிரம் மாயமாகியிருக்க, அவர் அலுவலர்களிடம் புகாரளித்துள்ளார்.
எங்கு கிடைத்தது தெரியுமா?
இந்த தகவல் வெளியானதும், ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிடத் துவங்கியுள்ளன. இது திட்டமிட்ட திருட்டா, கவனக்குறைவா என ஆளாளுக்கு ஒவ்வொரு கதைகள் எழுதத் துவங்கியுள்ளார்கள்.
பொலிசார் ஹொட்டலில் குவிய, மக்கள் பரபரப்படைய, கடைசியில், மோதிரம் ஹொட்டல் ஊழியர்கள் கையிலேயே கிடைத்துவிட்டது.
மோதிரம் எங்கிருந்தது தெரியுமா? அறையை சுத்தம் செய்ய பயன்படுத்திய, வாக்குவம் கிளீனர் ஒன்றின் குப்பைகள் சேரும் பைக்குள் இருந்துள்ளது அந்த மோதிரம்.
எவ்வளவு பரபரப்பானாலும், தனது மோதிரம் மீண்டும் கிடைத்ததில் அதன் உரிமையாளரான அந்த பெண்ணுக்கு மிக்க மகிழ்ச்சி.
இன்னொரு முக்கிய விடயம். அவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய அந்த மோதிரத்தில் விலை, 750,000 யூரோக்கள் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |