சாலையில் வைரக்கற்கள் விழுந்ததா! பொதுமக்கள் குவிந்து மும்முரமாக தேடல்
இந்திய மாநிலம், குஜராத்தில் சாலையில் வைரக்கற்கள் விழுந்ததாக பரவிய வதந்தியால் பொதுமக்கள் மும்முரமாக தேடி ஏமாற்றம் அடைந்தனர்.
வைரத்தை தேடிய மக்கள்
குஜராத் மாநிலம் சூரத் நகரின் வரச்சா பகுதியில் உள்ள வைர வியாபாரி ஒருவர் சாலையில் ஏராளமான வைரக்கற்களை தவறுதலாக சிதறியதாக தகவல் ஒன்று வேகமாக பரவியது. பின்னர், இந்த வதந்தி மக்களிடையே தீ போல பரவியது.
இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உள்பட பலரும் தெருவில் கூடி, சுத்தம் செய்து வைரக்கற்களை தேடி அலைந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அலங்கார கற்கள் என ஏமாற்றம்
அப்போது, தேடிக்கொண்டிருந்த சிலருக்கு வைரக்கற்கள் கிடைத்தது. ஆனால், அவைகள் அனைத்தும் அமெரிக்க வைரங்கள் எனவும், கவரிங் நகைகள் மற்றும் சேலைகளில் அலங்காரம் செய்யப்படும் கற்கள் தெரியவந்தது.
હીરાની લૂંટ ચલાવતા સુરતીલાલાઓ #Surat #Diamonds #Gujarat #people pic.twitter.com/KU1V1Eh6M4
— Prutha Paghadal (@Pruthapaghadal) September 24, 2023
இதனால், அவர்கள் வைரக்கற்கள் இல்லை என ஏமாற்றமடைந்தனர். தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Vinash Kaal
— তন্ময় l T͞anmoy l (@tanmoyofc) September 25, 2023
Due to terrible recession in Surat Diamond Market, Diamond traders threw Diamonds on the road.#ModiHaiToMumkinHai #GujaratModel #MannKiBaat @B5001001101 @surajitdey1979 pic.twitter.com/MWq3aj1Kwq
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |