இளவரசி டயானா - சார்லஸ் திருமண கேக் துண்டு ஏலத்தில் விற்பனை! எவ்வளவுக்கு வாங்கப்பட்டது தெரியுமா?
சார்லஸ் - டயானா திருமணத்தில் வெட்டப்பட்ட கேக் துண்டு ஏலத்தில் விற்பனை.
£170க்கு விற்பனையானது.
சார்லஸ் - டயானா திருமணத்தில் வெட்டப்பட்ட கேக் துண்டு £170க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
பிரித்தானிய மன்னர் சார்லஸுக்கும், டயானாவுக்கும் கடந்த 1981ல் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. அதில் ஒரு துண்டு Windsor castleல் பணியாற்றிய Nigel Ricketts- என்பவரிடம் இருந்தது.
இந்த நிலையில் குறித்த கேக் துண்டு 41 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் ஏலத்தில் விடப்பட்டது. விற்பனைக்கு முந்தைய மதிப்பீடு £300 இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
Dore & Rees)
ஆனால் அதை விட குறைவான விலையில் £170க்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. கேக் பெட்டியில் "பக்கிங்ஹாம் அரண்மனை" மற்றும் திருமண தேதி முத்திரையிடப்பட்டது.
1981ல் திருமணம் செய்து கொண்ட சார்லஸ் - டயானா தம்பதி 1996ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதற்கு அடுத்த ஆண்டான 1997ல் டயானா கார் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.