இளவரசி டயானாவின் மரணம் விபத்து அல்ல கொலை என்று கூறிய நபர் மரணம்: இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள்
இளவரசி டயானா கார் விபத்தில் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்த போதிலும், அது விபத்து அல்ல, கொலை, அதை ஏற்பாடு செய்ததே பிரித்தானிய பாதுகாப்பு அமைப்புதான் என்பதை நிரூபிக்க நீண்ட காலம் போராடிய ஒருவர் மரணமடந்துள்ளார்.
இளவரசி டயானாவுக்கும் அவருக்கும் என்ன ஒற்றுமை?
இளவரசி டயானா உயிரிழந்ததும் ஆகஸ்ட் மாதம்தான், இந்த பிரபலமான நபர் மரணமடைந்ததும் ஆகஸ்ட் மாதம்தான். சொல்லப்போனால், டயானா ஆகஸ்ட் 31ஆம் திகதி உயிரிழந்தார், இவர் ஆகஸ்ட் 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
டயானாவும் தன் வாழ்க்கையை ஒரு ஆசிரியையாக துவக்கியவர், இந்த நபரின் தாயும் ஒரு ஆசிரியை.
Eamonn McCabe/The Guardian
சரி, இவருக்கும் இளவரசி டயானாவுக்கும் என்ன தொடர்பு?
இவர் வேறு யாருமில்லை, டயானாவின் கடைசி காதலரான டோடி அல் ஃபயதின் தந்தைதான் அவர். அவரது பெயர் மொஹமத் அல் ஃபயத் (94).
பிரித்தானிய மோகம்
எப்படியாவது பிரித்தானியக் குடியுரிமை வாங்கிவிடவேண்டும் என படாத பாடு பட்டும் மொஹமதின் முயற்சி பலிக்கவில்லை.
ஆகவே, தான் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அவர் புகார் கூற, அவர்கள் தங்கள் அரசியல் வாழ்வையே இழந்தார்கள்.
Mark Richards/Daily Mail/Shutterstock
மற்றொரு கேபினட் அமைச்சருக்கு சவுதியுடனான ஆயுத விவகாரத்தில் தொடர்பு இருப்பதை மொஹமத் வெளிப்படுத்த, அவரும் சிறை சென்றார்.
பல பிரித்தானிய நிறுவனங்களை விலைக்கு வாங்கிய மொஹமத், பாரீஸிலுள்ள Ritz ஹொட்டலை வாங்கினார். அங்கிருந்து தன் காதலரும் மொஹமதின் மகனுமான டோடியுடன் புறப்பட்ட இளவரசி டயானா, வழியிலேயே விபத்தில் உயிரிழந்தார்.
Kieran Doherty/Reuters
அது விபத்தல்ல, பிரித்தானிய பாதுகாப்பு அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கொலை என கூறி நீதிமன்றம் சென்றார் மொஹமத். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என பிரித்தானியா கூறிவிட்டது.
தன் மகனும், இளவரசி டயானாவும் உயிரிழந்து 26 ஆண்டுகளுக்குப் பின் அதே ஆகஸ்ட் மாதத்தில் மரணமடைந்துள்ளார் மொஹமத்.