மகன்களை விட்டுவிட்டு நாட்டைவிட்டு வெளியேற திட்டமிட்ட இளவரசி டயானா: வெளிவரும் புதிய தகவல்
ஊடக வெளிச்சத்தில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற பிரித்தானியாவில் இருந்து வெளியேற வேண்டும்
பிரித்தானியாவில் இனி தனிப்பட்டமுறையில் தம்மால் எதையும் செய்துவிட முடியாது என கவலை
பிரித்தானிய இளவரசி டயானா விபத்தில் சிக்கி இறப்பதற்கும் சில வாரங்கள் முன்னர் மகன்களை விட்டுவிட்டு நாட்டைவிட்டு வெளியேற திட்டமிட்டதாக அவரது பாதுகாவலரில் ஒருவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இளவரசி டயானாவின் பாதுகாவலரில் ஒருவரான Lee Sansum என்பவரே குறித்த தகவலை தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 1997 ஜூலை மாதம் St Tropez பகுதியில் விடுமுறையை கொண்டாடி வந்த இளவரசி டயானா தமது பாதுகாவலரான Lee Sansum என்பவரிடம் இதை கூறியுள்ளார்.
@wireimage
ஊடக வெளிச்சத்தில் இருந்து தமது பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்றால், தாம் பிரித்தானியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, தமது பிள்ளைகளை விட்டுவிட்டு அமெரிக்காவில் குடியேறுவதே தமது திட்டம் எனவும் டயானா கூறியுள்ளார்.
St Tropez பகுதியில் டயானா விடுமுறையைக் கொண்டாடி வந்த நாட்களில் தினமும் பாப்பராசி எனப்படும் ஊடகத்தினரால் தொல்லைகளுக்கு இலக்காகி வந்துள்ளார். பிரித்தானியாவில் இனி தனிப்பட்டமுறையில் தம்மால் எதையும் செய்துவிட முடியாது என கவலை தெரிவித்துள்ள டயானா, நான் என்ன செய்தாலும் அங்குள்ள பத்திரிகைகள் என்னைத் தாக்குகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், பிரித்தானியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேற வேண்டும். அவர்கள் என்னை கண்டிப்பாக தொந்தரவு செய்ய மாட்டார்கள் என டயானா நம்பியுள்ளார்.
@getty
தனது பிள்ளைகள் இருவரையும் விட்டுவிட்டு செல்ல முடிவு செய்த டயானா, அவர்களின் பள்ளி விடுமுறைகளில் மட்டுமே சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பை அமைத்துக் கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக Lee Sansum தமது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, St Tropez பகுதியில் இருந்து நாடு திரும்பியதும் தாம் இங்கிலாந்தை விட்டு வெளியேறுவதாக செய்தியாளர்களிடம் கூறப் போவதாக அறிவிக்க இருப்பதாக டயானா கூறியுள்ளார்.
ஆனால் பத்திரிகையாளர்களை சந்தித்த டயானா அமெரிக்காவில் தாம் குடியேறப்போவது தொடர்பில் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்றே Lee Sansum தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
@timgraham
இந்த நிலையில், ஆகஸ்ட் 1997 ல் பாரிஸ் நகர கார் விபத்தில் டயானாவும் அவரது காதலர் டோடியும் கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் அவர் உளவியல் பாதிப்புடன் காணப்பட்டதாக முன்னாள் ரானுவ சிறப்பு அதிகாரி ஒருவர் பதிவு செய்துள்ளதாக Lee Sansum தமது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.