இளவரசர் வில்லியம் அல்ல ஹரி மன்னராகவேண்டும்: இளவரசி டயானா வைத்திருந்த திட்டம்
இளவரசி டயானா உயிருடன் இருக்கும்போது, தன் மூத்த மகனான இளவரசர் வில்லியம் அல்ல, தன் இளைய மகனான ஹரிதான் சார்லசுக்குப் பின் மன்னராகவேண்டும் என திட்டம் வைத்திருந்ததாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹரி மன்னராகவேண்டும்
இளவரசர் வில்லியம் சிறு வயதில் மிகவும் வெட்கப்படும் ஒரு நபராக இருந்துள்ளார்.
ஆகவே, சார்லசுக்குப் பின் இளவரசர் ஹரிதான் பிரித்தானிய மன்னராகவேண்டுமென இளவரசி டயானா திட்டம் வைத்திருந்தார் என்கிறார் ஊடகவியலாளரும், இளவரசி டயானாவின் நண்பருமான ரிச்சர்ட் கே என்பவர்.

சொல்லப்போனால், சிறுவயதில், ஹரியை 'Good King Harry' என்றுதான் அழைப்பாராம் டயானா.
வெட்க குணம் கொண்ட வில்லியமுக்கு மன்னராகும் விருப்பம் இல்லை என்று தன்னிடம் டயானா கூறியதாக தெரிவிக்கிறார் ரிச்சர்ட்.
ஆகவே, சார்லசுக்குப் பின் ஹரியை எப்படி மன்னராக்குவது என டயானா திட்டமிட்டுக்கொண்டிருந்ததாகவும் ரிச்சர்ட் தெரிவிக்கிறார்.

கடைசியாக, ‘நல்லவேளையாக, டயானாவின் திட்டம் பலிக்கவில்லை’ என வேடிக்கையாக கூறியுள்ள ரிச்சர்ட், அதற்காக நாம் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் என்றும் ஹரியை கேலி செய்யும் வகையில் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |