இளவரசி டயானா பயன்படுத்திய அந்த பிரபல கார் ஏலம் போனது! எவ்வளவு விலை தெரியுமா?
இளவரசி டயானா பயனபடுத்திய பழைய போர்ட் எஸ்கார்ட் கார்ட் நினைத்து பார்க்காத ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
இளவரசியான டாயான உயிரிழந்த பின்பும், அவர் தொடர்பான செய்திகள் இன்றளவும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில், தற்போது இளவரசி டயான் தான் உயிரோடு இருந்த காலக்கட்டத்தில் பழைய Ford Escort காரைப் பயன்படுத்தி வந்தார்.
இந்த காரை இளவரசர் சார்லஸ், கடந்த 1981-ஆம் ஆண்டு தங்களுடைய திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு இருந்த போது, டயானாவிற்கு கொடுத்தார். அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்த டயானா 1982-ஆம் ஆண்டு, இளவரசர் வில்லியம் பிறந்த பிறகு, அதை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்.
அதன் பின் இந்த காரை அப்போதைய வியபாரி ஒருவர் சுமார் 6000 பவுண்ட்டுக்கு வாங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து 2000-ஆம் ஆண்டு இந்த கார் பெண் ஒருவருக்கு சொந்தமானது.
இந்த காரை அவர் தன் நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது, சில நேரங்களில் மட்டுமே பயன்படுத்துவதை பழக்கமாக கொண்டிருந்தார். அவர் ஒரு போதும், இந்த காரின் வரலாற்று பற்றி கூறவில்லை.
இதையடுத்து தற்போது Essex-ன் Colchester-ல் Reeman Dansie நடத்திய ஆன்லைன் ஏலத்தில் இந்த கார் ஏலம் விடப்பட்டது. இது சுமார் 30000 பவுண்ட் முதல் 40000 பவுண்ட் வரை ஏலம் போகும் என்று கருத்தப்பட்டது.
ஆனால், இந்த கார் 52,640. பவுண்ட்டுக்கு ஏலம் விடப்பட்டது.
Reeman Dansie ஏலத்தைச் சேர்ந்த லூயிஸ் ராபெட் என்பவர் இந்த ஏலம் குறித்து கூறுகையில், இந்த ஏலம் உலகளவில் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியது.
இந்த வாகனம் 83,000 மைல்கள் ஓடியுள்ளது. இதன் வண்டி எண்(WEV 297W) மற்றும் அதன் அசல் வண்ணப்பூச்சு இப்போதும் வரை அப்படியே உள்ளதாக கூறினார்.