விபத்தில் செத்துப்பிழைத்த டயானா: உயிர்காக்கும் சிகிச்சையளித்தவர் கூறும் பரபரப்பு தகவல்

United Kingdom Princess Diana
By Balamanuvelan Aug 22, 2022 12:33 PM GMT
Report

பாரீஸில் தன் காதலருடன் காரில் பயணிக்கும்போது நடந்த விபத்தில் பலியானார் இளவரசி டயானா.

அவர் உயிரிழக்கும் முன் தன்னிடம் பேசியதாக தெரிவித்துள்ளார் தீயணைப்புத்துறை வீரர் ஒருவர்.

பாரீஸில் நடந்த விபத்தொன்றில் பிரித்தானிய இளவரசி டயானா உயிரிழந்ததை அறிவோம்.

ஆனால், தான் டயானாவுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து, அவரை உயிருடன்தான் மருத்துவமனைக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார் தீயணைப்பு வீரர் ஒருவர்.

1997ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 31ஆம் திகதி, பாரீஸிலுள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் சிக்கினார் பிரித்தானிய இளவரசி டயானா.

விபத்தில் செத்துப்பிழைத்த டயானா: உயிர்காக்கும் சிகிச்சையளித்தவர் கூறும் பரபரப்பு தகவல் | Diana Survived The Accident

Image: PA

அவர் உயிரிழந்துவிட்டதாகத்தான் இதுவரை செய்திகள் தெரிவித்தன. ஆனால், தான் டயானாவை உயிருடன் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் தீயணைப்பு வீரர் ஒருவர்.

விபத்து நடந்த இடத்துக்கு முதலில் வந்தவர்களில் தீயணைப்பு வீரரான Xavier Gourmelonம் ஒருவர். ஏதோ ஒரு விபத்து, யாரோ ஒரு பெண் விபத்தில் காயமடைந்துள்ளார் என்றே எண்ணிய Xavierக்கு, விபத்தில் சிக்கியது இளவரசி டயானா என்பது தெரியாது.

படுகாயமடைந்து காருக்குள் சிக்கியிருந்த டயானாவை மெல்ல வெளியே எடுத்த Xavierஇடம், கடவுளே, என்ன நடந்தது என்று கேட்டாராம் டயானா. சிறிது நேரத்தில் டயானாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

விபத்தில் செத்துப்பிழைத்த டயானா: உயிர்காக்கும் சிகிச்சையளித்தவர் கூறும் பரபரப்பு தகவல் | Diana Survived The Accident

Image: Getty Images

உடனே, தான் பிரபலமான ஒருவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கிறோம் என்பதெல்லாம் தெரியாத Xavier, அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்துள்ளார். அவர் டயானாவுக்கு இதய மசாஜ் அளிக்க, சில விநாடிகளுக்குப் பின் சுவாசிக்கத் துவங்கினாராம் டயானா.

தான் டயானாவை ஆம்புலன்சில் அனுப்பும்போது அவருக்கு உயிர் இருந்தது, அவர் உயிர் பிழைத்துக்கொள்வார் என்றுதான் நினைத்தேன். ஆனால், மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டதாக பின்னர் கேள்விப்பட்டபோது நான் மிகவும் அப்செட்டாகிவிட்டேன் என்கிறார் Xavier.

அவருக்கு உள்காயங்கள் இருந்ததை அறிவேன் என்று கூறும் Xavier, ஆனால், அன்று அங்கு நடந்த எதுவும் எனக்கு மறக்கவில்லை, அந்த நினைவுகள் எப்போதுமே என்னுடன் இருக்கும் என்கிறார்.

விபத்தில் செத்துப்பிழைத்த டயானா: உயிர்காக்கும் சிகிச்சையளித்தவர் கூறும் பரபரப்பு தகவல் | Diana Survived The Accident

Image: Corbis via Getty Images

அவர் இளவரசி டயானா என்பது எனக்குத் தெரியாது என்று கூறும் Xavier, அவர் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டபிறகுதான் மருத்துவ உதவிக் குழுவினரில் ஒருவர் அது இளவரசி டயானா என தன்னிடம் கூறியதாக தெரிவிக்கிறார்.

வாழும்போது நேர்மறை மற்றும் எதிர்மறை என பல்வேறு காரணங்களுக்காக உலகின் கவனம் ஈர்த்தவர் டயானா. அவர் இறந்த பிறகும் அவர் குறித்த தகவல்கள் புதிது புதிதாக வெளியாகி இன்னமும் கவனம் ஈர்த்துக்கொண்டுதான் உள்ளன.  


மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US