இளவரசி டயானா சிலை திறப்பு நிகழ்ச்சியில் இளவரசர் சார்லஸ் கலந்துகொள்வாரா? நண்பர் வெளியிட்டுள்ள தகவல்
அடுத்த மாதம் 1ம் திகதி வந்தால், மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவுக்கு 60 வயது ஆகியிருக்கும். ஆகவே, தங்கள் தாயின் 60ஆவது பிறந்தநாளில், அவரை கௌரவிக்கும் வண்ணமாக, இளவரசர் வில்லியமும் ஹரியும் டயானாவின் உருவச் சிலை ஒன்றைத் திறந்துவைக்க இருக்கிறார்கள்.
ஆனால், அந்த சிலை திறப்பு விழாவில், டயானாவின் முன்னாள் கணவரான இளவரசர் சார்லஸ் கலந்துகொள்வாரா என்ற கேள்வி பலரது மனதிலும் உள்ளது.
இந்நிலையில், டயானா சிலை திறப்பு நிகழ்ச்சியில் இளவரசர் சார்லஸ் கலந்துகொள்ளமாட்டார் என அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் அப்போது ஸ்காட்லாந்தில் இருப்பார் என்கிறார் அவர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது சார்லஸுக்கு பழைய நினைவுகளைக் கொண்டுவரலாம் என்று கூறும் அவர், அதை மிகவும் கடினமானது என சார்லஸ் கருதுகிறார் என்கிறார்.
இந்த விடயம், பழைய காயங்களை மீண்டும் நினைவுபடுத்தக்கூடும் என்று கூறும் அந்த நண்பர், மகிழ்ச்சி, கவலை, வருத்தம் என பல்வேறு உணர்வுகளுடன் கூடிய நினைவுகளை அவை கொண்டுவரக்கூடும் என்கிறார்.
இதற்கு முன், 2017ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 1ம் திகதி டயானா நினைவாக அவரது கல்லறையில் ஒரு தனிப்பட்ட ஆராதனை நடத்தப்பட்டது.
அதிலும் சார்லஸ் கலந்துகொள்ளவில்லை, அப்போது அவர் 3,000 மைல்களுக்கப்பால், அரசு முறைப் பயணமாக கனடாவில் இருந்தார்!