லங்கா பிரீமியர் லீக்: முதல் போட்டியிலேயே இலங்கை வீரர் அதிரடி அரைசதம்
கொழும்பில் நடந்து வரும் ஜாப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கொழும்பு அணியின் கேப்டன் நிரோஷன் திக்வெல்ல அதிரடி அரைசதம் விளாசினார்.
4வது சீஸன் தொடக்கம்
இலங்கையில் லங்கா பிரீமியர் லீக்கின் நான்காவது சீஸன் இன்று கொழும்பில் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் ஜப்னா அணிகள் மோதி வருகின்றன.
முதலில் ஆடிய ஜாப்னா அணி 5 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்கள் குவித்தது. டோயித் ஹ்ரிதாய் 39 பந்துகளில் 54 ஓட்டங்கள் விளாசினார்.
SLC
திக்வெல்ல அதிரடி அரைசதம்
இதனைத் தொடர்ந்து கொழும்பு அணி களமிறங்கியது. கேப்டன் நிரோஷன் திக்வெல்ல அதிரடியில் மிரட்டினார். பவுண்டரிகளை தொடர்ந்து விரட்டிய அவர் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
Twitter (ColomboStrikers)
இதில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும்.
கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் தற்போது வரை 10 ஓவரில் 85 ஓட்டங்கள் எடுத்துள்ளது.