நிச்சயதார்த்தம் நடந்து மூன்றே மாதம் - திருமணத்தை ரத்து செய்த நிவேதா பெத்துராஜ்?
நிச்சயதார்த்தம் நடைபெற்று 3 மாதங்களே ஆன நிலையில், நிவேதா பெத்துராஜின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ம்ரிதி மந்தனா திருமணம் ரத்து
சமீபத்தில், இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா தனது ரத்து செய்வதாக அறிவித்தார்.

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி தனது நீண்ட நாள் காதலரான பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் ஸ்ம்ரிதிக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் அன்றைய தினம் ஸ்ம்ரிதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து, திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இரு நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.
ஆனால் திருமணம் ரத்து செய்யப்பட்டதன் காரணம் குறித்து அறிவிக்காத நிலையில், என்ன ஆனது என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்து
அதே போல், நடிகை நிவேதா பெத்துராஜின் திருமணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

. 2016 ஆம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்க தமிழன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
துபாயை சேர்ந்த தொழிலதிபரான ரஜித் இப்ரானுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அறிவித்தார் நிவேதா பெத்துராஜ்.

இருவரும் ஒன்றாக உள்ள படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், ரஜித் இப்ரானுடனான புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நிவேதா பெத்துராஜ் நீக்கியுள்ளார். மேலும், இருவரும் இன்ஸ்டாகிராம் கணக்கை அன்ஃபாலோ செய்துள்ளனர்.
இதன் காரணமாக திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதா என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |