இளவரசர் ஹரியின் புத்தகம் உங்களை காயப்படுத்தியதா?: மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரிடம் கேள்வி
இளவரசர் ஹரியின் புத்தகம் உங்களை காயப்படுத்தியதா என மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரின் ரெஸ்பான்ஸ்
இளவரசர் ஹரி வெளியிட்டுள்ள Spare என்னும் புத்தகத்தில் தன் குடும்ப உறுப்பினர்கள் குறித்து கடும் விமர்சனங்களை அவர் முன்வைத்துள்ளார்.
ஆனாலும், அது குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளாத ராஜ குடும்ப மூத்த உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதில் கவனம் செலுத்திவருகிறார்கள்.
Royal Liverpool Hospital என்னும் புதிய மருத்துவமனையைத் திறந்துவைப்பதற்காக இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் வந்திருந்த நிலையில், இளவரசர் ஹரியின் புத்தகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ஒரு ஊடகவியலாளர் அவர்களிடம் கேள்வி எழுப்பினார். ஆனால், தம்பதியர் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. புன்னகைத்தபடி தங்கள் பணியைத் தொடர்ந்தார்கள் அவர்கள்.
மன்னர் சார்லசிடம் எழுப்பப்பட்ட கேள்வி
மன்னர் சார்லஸ் Aberdeenshire என்ற இடத்துக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தார். அவர் அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு புறப்படும்போது, அவரிடமும், இளவரசர் ஹரியின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் உங்களை காயப்படுத்தியதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சார்லசும் அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் கூறாமல் தனது காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டார்.