ட்ரம்ப் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்த இளவரசி கேட்டை முறைத்த ராணி கமீலா? இணையத்தில் வைரலாகும் செய்தி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தன் மனைவி மெலானியாவுடன் பிரித்தானியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள நிலையில், மெலானியாவிடம் பேசிக்கொண்டிருந்த இளவரசி கேட்டை ராணி கமீலா ஓரக்கண்ணால் முறைத்ததாக ஒரு செய்தி இணையத்தில் பரவிவருகிறது.
இளவரசி கேட்டை முறைத்த ராணி கமீலா?
இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் ட்ரம்பையும் மெலானியாவையும் வரவேற்ற நிலையில், மன்னர் சார்லசும் இளவரசர் வில்லியமும் ட்ரம்புடன் பேசிக்கொண்டிருக்க, ராணி கமீலா மெலானியாவுடன் பேசிக்கொண்டிருப்பதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
I’m here for Camilla’s side eye😂😂 pic.twitter.com/jwg2W2cFkT
— SK 💃🏾🕺 (@Rimmesfk) September 17, 2025
அப்போது இளவரசி கேட் இடையில் நுழைந்து எதையோ கூற, அவரை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்க்கிறார் கமீலா.
சமூக ஊடகமான எக்ஸில் வெளியான இந்தக் காட்சி ஒரு மில்லியன் பார்வைகளைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.
என்ன கமீலா இளவரசி கேட்டை ஓரக்கண்ணால் முறைத்தாரா என ஒருவர் கேட்க, ராணி கமீலா அப்படித்தான் என மற்றொருவர் கூறியுள்ளார்.
ராணியும் மெலானியாவும் பேசிக்கொண்டிருக்கும்போது கேட் இடையில் நுழையலாமா? கேட் செய்தது மரியாதை இல்லை, இன்னமும் சார்லஸ்தான் மன்னர் என்பதை மறந்துவிட்டார்போலும் என இன்னொருவர் கூற, அந்த வீடியோ வைரலாகிகொண்டிருக்கிறது.