சவப்பெட்டியில் ராணி படுத்திருக்கும் வீடியோ! அவரின் மரணம் பல காலம் முன்னரே கணிக்கப்பட்டு விட்டதா?
பிரித்தானிய ராணியின் முன்னரே Simpsons கார்ட்டூன் கதாபாத்திரத்தால் கணிக்கப்பட்டதாக பரவிய வீடியோ.
குறித்த வீடியோ போலியானது என தகவல்.
பிரித்தானிய மகாராணியின் மரணத்தை The Simpsons என்ற கார்ட்டூன் கதாபாத்திரம் முன்னரே கணித்ததாக வீடியோ ஒன்று வைரலாகும் நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து தெரியவந்துள்ளது.
பல ஆண்டுகளாக, சிம்ப்சன்ஸின் விசித்திரமான கணிப்புகள் உலகம் முழுவதும் உள்ள பலரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளாக்கியிருக்கிறது. ஏனெனில் சிம்ப்சன்ஸ் கதாபாத்திரத்தில் காட்டப்படும் பல விடயங்கள் பின்னாளில் பலித்துள்ளது மற்றும் பலிக்காமலும் இருந்துள்ளது.
அந்த வகையில் மகாராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டியில் படுத்து கிடப்பது போலவும், அவர் 1926 - 2022 வரை உயிர் வாழ்ந்தார் என்பதை முன்னரே சிம்ப்சன்ஸ் பாத்திரம் கணித்ததாகவும் அனிமேஷன் வீடியோ ஒன்று பரவியது.
Another accurate creepy prediction from the Simpsons
— No Truckers No Freedom (@NoTrucks_NoFood) September 18, 2022
?
Queen’s death..
??? pic.twitter.com/yo6zYlSVFY
இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிலையில் குறித்த வீடியோ போலியானது என தெரியவந்துள்ளது.
அதன்படி அனிமேஷன் நிகழ்ச்சியில் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போலியாக உருவாக்கப்பட்டவை எனவும், ராணியின் மரணத்தை காட்டும் நிகழ்ச்சி அதன் எந்த எபிசோடிலும் இதுவரை ஒளிபரப்பப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
of course the simpsons predicted queen elizabeth’s death. pic.twitter.com/UhHDkQe6fB
— CAV (@cavgtaofficial) September 18, 2022