SIR மூலம் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி; ஆய்வில் வெளியான தகவல்
data shows tvk wons more in more sir deletion constiution: SIR மூலம் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெகவும், குறைந்த வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் திமுக அதிகளவிலும் வெற்றி பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்கள்
எஸ்ஐஆர் நடவடிக்கையில் மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலின்றி ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுத்ததாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டத்தை தொடங்கி வருகின்றன.
SIR நடவடிக்கைக்குப் பிறகு தேர்தல் நடைபெற்ற மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே நடைபெற்ற சட்டசபை தேர்தல்களை ரத்து செய்துவிட்டு, அந்த மாநிலங்களில் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி மறுதேர்தல் நடத்த வேண்டும்" என பல்வேறு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்த சூழலில் பிரபல நாளிதழான business line மேற்கொண்ட ஆய்வில், SIR மூலம் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெகவும், குறைந்த வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் திமுக அதிகளவிலும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால், ஒரு அரசியல் கட்சியின் வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்து நீக்குவது சாத்தியம் இல்லை என்றும், நீக்கப்பட்ட வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள் என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 10,000 வாக்காளர்களுக்கு குறைவாக நீக்கப்பட்ட 19 தொகுதிகளில், திமுக 7 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், மற்ற கட்சிகள் 4 இடங்களிலும், தவெக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

10,000 முதல் 20,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட 80 தொகுதிகளில், திமுக 20 இடங்களிலும், அதிமுக 24 இடங்களிலும், தவெக 22 இடங்களிலும், மற்ற கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
20,000 முதல் 30,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட 66 தொகுதிகளில், தவெக 32 இடங்களிலும், திமுக 21 இடங்களிலும், அதிமுக 11 இடங்களிலும்,மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
30,000 முதல் 50,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட 37 தொகுதிகளில், தவெக 24 இடங்களிலும், திமுக 8 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

50,000 முதல் 80,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட 22 தொகுதிகளில், தவெக 18 இடங்களிலும், திமுக 3 இடங்களிலும், அதிமுக 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
80,000க்கும் அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெகவே வெற்றி பெற்றுள்ளது.