பாகிஸ்தானில் உள்ள கிரானா மலை ஏன் அவ்வளவு முக்கியம்? இந்த மலை மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதா
பாகிஸ்தானில் உள்ள கிரானா மலை மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதா என்ற கேள்விக்கு இந்திய ராணுவ அதிகாரி விளக்கமளித்திருக்கிறார்.
ராணுவ அதிகாரி விளக்கம்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நிலவியது. பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன. இந்நிலையில் இந்தியா மீது மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியானது.
இதையடுத்து நேற்று முப்படைகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப்பேசினர். அப்போது அவரிடம் அணுஆயுதங்கள் இருக்கும் பகுதியாக கருதப்படும் பாகிஸ்தான் கிரானா மலையின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சர்கோடா மாவட்டத்தில் கிரானா மலை உள்ளது. இந்த மலையில் தான் அணு ஆயுதங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மலையானது ஒன்லைன் வரைபடத்தில் பார்க்கும் போது அங்கு பழுப்பு மற்றும் பச்சை நிறத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை காணலாம். மேலும் இந்த மலையானது நிலத்தடி அணுசக்தி உள்கட்டமைப்புக்கு பெயர் பெற்ற இடமாகும்.
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் படி, பாகிஸ்தானில் உள்ள ரஃபிகி, முரித், நூர் கான், ரஹிம் யார் கான், சுக்கூர், சுனியன், பஸ்ரூர், சியால்கோட் உள்ளிட்ட 11 ராணுவ தளங்கள் தாக்கப்பட்டன.
கிரானா மலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு ராணுவ அதிகாரி பதில் அளிக்கையில், "கிரானா மலைகளில் சில அணு ஆயுத நிறுவல்கள் உள்ளன என்று கூறியதற்கு நன்றி. அங்கு என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. கிரானா மலை மீது தாக்குதல் நடத்தப்படவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |