இளவரசர்கள் வில்லியம் ஹரிக்கு ஒரு சகோதரி இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
இளவரசர்கள் வில்லியமுக்கும் ஹரிக்கும் ஒரு சகோதரி இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
சகோதரி மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு சகோதரனும் இருக்கிறார்.
பிரித்தானிய மன்னரின் மனைவியாகியிருக்கும் கமீலா, ஏற்கனவே ஒருமுறை திருமணமானவர் என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.
கமீலா, ஆண்ட்ரூ (Andrew Parker Bowles) என்பவரை திருமணம் செய்திருந்தார். 1995ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்தானது.
கமீலா ஆண்ட்ரூ தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். டாம் (Tom Parker Bowles) மற்றும் லாரா (Laura Lopes, 44)
பின்னர், கமீலா இளவரசர் சார்லசை திருமணம் செய்ததால், அவரது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு சகோதரன் சகோதரிதானே! (Step brother and sister)
கமீலாவுக்கும் ஆண்ட்ரூவுக்கும் பிறந்த மகன் டாம். அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் உணவு விமர்சகர்.
தம்பதியருக்கு பிறந்த மகள் லாரா, ஆங்கில கலைத்துறை தொடர்பிலான பணியிலிருக்கிறார். பொது நிகழ்ச்சிகளை பொதுவாக தவிர்க்கும் லாரா, இளம் வயதில் சந்தித்த அனுபவங்கள் காரணமாக இன்னமும் தன் மீது ஊடகப்பார்வை விழுவதைத் தவிர்க்கவே விரும்புகிறார்.
கமீலா, இளவரசர் சார்லசை திருமணம் செய்த பிறகு, தனது தாயின் கணவரும், அவரது பிள்ளைகளும் தனது இதயத்தைக் கவர்ந்துவிட்டதாக பெருமையாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.