கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் வடிவேலு வராதது ஏன்? சரத்குமார் கூறிய பதில் இதோ
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் வடிவேலு வராதது குறித்து சரத்குமார் பதில் அளித்துள்ளார்.
சரத்குமார் அஞ்சலி
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வர முடியாத பிரபலங்களும், மக்களும் அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சரத்குமார் துபாயில் இருந்ததால் தற்போது விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சரத்குமார் பேசியது..
பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "விஜயகாந்த் இறந்தது எனக்கு கருப்பு நாள். நான் அவருக்கு போட்டியாக வந்துவிடுவேன் என்று நினைக்காமல் பல படங்களில் என்னை நடிக்க வைத்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவருடன் இல்லாமல் இருந்தது எனக்கு வேதனையாக இருக்கிறது.
அவர் குணமடைந்து விடுவார் என்று நம்பினோம். அரசியல் ரீதியாக நாங்கள் வேறுபட்டு இருந்தாலும் அவர் என்னை சகோதரனாக தான் பார்த்தார்" என்று பேசினார்.
மேலும், விஜயகாந்த் இறப்புக்கு நடிகர் வடிவேலு வராதது ஏன் என்று அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "என்னுடைய சகோதரர் இறந்திருக்கிறார். அப்படி இருக்கும் போது யார் வருகிறார்கள், வராமல் உள்ளார்கள் என்பது முக்கியமில்லை. அதை பற்றி நான் பேச விரும்பவில்லை. அவர் குடும்பத்திற்கு திரைத்துறையினர் உறுதுணையாக இருப்போம்” என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |