ஈரான் போர்: சுவிட்சர்லாந்தில் டீசல் விலை 8.6 சதவிகிதம் உயர்ந்தது
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாடு பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல்களைத் மேற்கொண்டுவருகிறது.
எண்ணெய்க்கப்பல்கள் மீதான தாக்குதல்கள், ஹோர்மூஸ் ஜலசந்தியில் எண்ணெய்க்கப்பல்கள் போக்குவரத்துக்கு தடை என போரின் தாக்கத்தால் கச்சா எண்ணெய் விலையும், அதன் விளைவாக பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்துவருகின்றன.
சுவிட்சர்லாந்தில் டீசல் விலை உயர்ந்தது
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் டீசல் விலை 8.6 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி 1.75 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்த டீசல் விலை, மார்ச் மாதம் 9ஆம் திகதி, 1.90 சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர்ந்துள்ளது.
ஒரு சுவிஸ் ஃப்ராங்க் என்பது இலங்கை மதிப்பில் 399.18 ரூபாய் ஆகும்.
ஆக, வாகன எரிபொருள் விலை அதிகரிக்குமானால், போக்குவரத்து செலவு அதிகரிக்கும். போக்குவரத்து செலவு அதிகரித்தால், அதுவும் நுகர்வோர் தலையில்தான் வந்து சேரும் என்பதால், சில நாடுகளில் மளிகைப்பொருட்கள் விலையும் உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |