டயட் இல்லை! 7 மாதத்தில் 41 கிலோ குறைத்தது எப்படி? உணவு ரகசியத்தை கூறிய நபர்
உடல் எடையை குறைப்பது என்பது நம் அனைவருக்கும் மிகவும் கடினமான ஒரு காரியமாக உள்ளது. ஆனாலும் சிலர் முயற்சி செய்து உடல் எடையை குறைக்கின்றனர். அவர்களின் பாதையை பின்பற்றுவது மூலம் நாமும் கூட எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். அப்படி உடல் எடையை குறைக்க ஒருவர் செய்த முயற்சி குறித்து பார்க்கலாம்..
ராஜஸ்தான் பகுதியை சேர்ந்தவர் ஷஷாங்க் சங்கர். இவர் தனது 21 வயதிலயே 100 கிலோ வரை எடை கொண்டிருந்தார். இந்நிலையில் வெறும் 7 மாத இடைவெளியில் 41 கிலோ வரை குறைத்துள்ளார். இவர், தனது வாழ்க்கையில் அமைந்த திருப்புமுனை குறித்து விரிவாக கூறியுள்ளார். முதலில் நான் உடல் எடையை குறித்து கவலைப்படவில்லை.
ஆனால் எனது நண்பர்களே என்னை கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் மன உளைச்சளுக்கு ஆளான நான் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று கண்ணுக்கு கிடைத்த பொருளை கொண்டு உடற்பயிற்சி செய்ய தொடங்கினேன்.
காலை உணவு: பெரும்பாலும் காலை வேளையில் உப்புமா அல்லது ஒரு கிளாஸ் பாதாம் பால் குடிப்பேன்.
மதிய உணவு: இரண்டு சப்பாத்திகள், ஒரு கிண்ணம் பருப்பு, தயிர் மற்றும் முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவேன்.
இரவு உணவு: ஒன்று அல்லது இரண்டு சப்பாத்திகள் பிறகு படுக்கைக்கு செல்வதற்கு முன்னால் ஒரு கிளாஸ் பால் குடிப்பேன்.
உடற்பயிற்சிக்கு முன்னர் முளைக்கட்டிய தானியங்கள் கொண்டு செய்த சாலட். நான் வழக்கமாக உடற்பயிற்சிக்கு பிறகு தான் எனது காலை உணவை சாப்பிடுவேன். ஆனால் எனக்கு அப்போதும் பசியாக இருந்தால் மோர் புரோட்டின் ஷேக்கை எடுத்துக்கொள்வேன்.
குறைந்த கலோரி உணவுகளாக பழங்கள் மற்றும் சாலடுகளை எடுத்துக் கொள்வேன். வாரத்தில் ஆறு நாட்களுக்கு நான் உடற்பயிற்சி செய்தேன். ஆறு நாட்களும் ஓடுதல் மற்றும் படிக்கட்டு ஏறுதல் ஆகியவற்றை எனது உடற்பயிற்சியாக கொண்டிருந்தேன்.
நான் தினமும் காலையில் சுமார் 5 கி.மீ ஓடுவேன். அதே போல 12 முறை படிகட்டுகளில் ஏறி இறங்குவேன். எனக்கு உடல் எடையை குறைக்க தூண்டுகோளாக அமைந்தது கிறிஸ்டியானோ ரொனோல்டோவின் வீடியோ தான். அவர்கள் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை கொண்டிருந்தனர்.
நான் ஒவ்வொரு முறையும் அவர்களின் வீடியோக்களை பார்க்கும்போது நானும் அத்தகைய உடற்கட்டை அடைய வேண்டும் என ஆசைப்பட்டேன். எனவே நான் எனது எடை இழப்பின் மீது அதிக கவனம் செலுத்த துவங்கினேன். அதன்படி 120 கிலோவில் இருந்து ஏழே மாதத்தில் கிட்டத்தட்ட 41 கிலோவை குறைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.