Contract மற்றும் Agreement இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்
Contract & Agreement பொதுவாக பார்க்கும் போது ஒன்றாக இருக்கும், ஆனால் சட்டரீதியாக இரண்டும் மாறுபட்டவை.
Agreement என்பது இரு நபர்களுக்கு இடையில் பேச்சு அளவிலோ அல்லது நம்பிக்கை அடிப்படையிலோ ஒரு செயலை செய்ய ஒப்புக் கொள்வதாகும்.
Contract என்பது இரு நபருக்கு இடையே எழுத்து மூலமாக ஒரு குறிப்பிட்ட பயனை(consideration) இருவரும் பெற சட்டரீதியாக(Legal aspect) ஒப்புக் கொள்வதாகும்.
உதாரணமாக
உங்கள் நண்பருக்கு உங்களுடைய வீட்டை தங்குவதற்கு இலவசமாக கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு எவ்வித பயனும் இல்லை (CONSIDERATION). இப்போது உங்கள் மனம் மாறும் போது அவரை வெளியே அனுப்பலாம். சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது. இது Agreement ஆகும்.
இதுவே Contract என்பது உங்கள் நண்பரிடம் ஒரு ரூ.50,000/- முன்பணம் பெற்று, மாத வாடகை ரூ.5,000/- தரும்படி வாடகைக்கு கொடுத்து ஒப்பந்தம் போட்டுள்ளீர்கள்.
இப்போது இருவருக்கும் பயன் (consideration) உள்ளது. எனவே எந்த முன் அறிவிப்பும் இன்றி அவரை வெளியேற்ற விரும்பும் போது, அவரால் சட்ட முறை நடவடிக்கை எடுக்க முடியும்.