ரயில் பயணம் தொடர்பில் பிரான்ஸ் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை
ரயில் பயணிகளுக்கு மே மாதம் கடினமான நேரமாக இருக்கும் என பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை
தங்கள் அன்றாட பயணத்துக்கு ரயிலை பயன்படுத்துவோருக்கு, மே மாதம் கடினமான நேரமாக இருக்கும் என பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சரான Philippe Tabarot எச்சரித்துள்ளார்.
அதற்குக் காரணம், மே மாதத்தில் பல பெரிய போக்குவரத்து யூனியன்கள் வேலைநிறுத்தம் செய்யும் அபாயம் உள்ளதுதான் என்கிறார் அவர்.
மே மாதம் 5ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை சில போக்குவரத்து யூனியன்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
சாரதிகளின் போனஸை அதிகரித்தல், பணியாளர்கள் விடுப்பு எடுத்தாலோ அல்லது வேலைக்கு வராவிட்டாலோ கூட அவர்களுக்கு போனஸ் வழங்குதல் முதலான பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், பல யூனியன்கள் ஒரு செட்டில்மென்டுக்கு வர மறுப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சரான Philippe Tabarot தெரிவித்துள்ளார்.
மே 7ஆம் திகதியும் சில யூனியன்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளன.
ஆக, பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளை தீர்த்து, வேலைநிறுத்தத்தை தடுக்கும் முயற்சிகளைத் துவக்க அதிகாரிகள் திட்டமிட்டுவருகின்றனர்.