பிரான்சில் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் கஷ்டங்கள்...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதற்கான அழகான விளையாட்டு அரங்கங்கள் பிரம்மாண்டமாக உருவாகிவருகின்றன.
ஆனால், அவற்றை உருவாக்குவதின் பின்னணியில் பல ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் இருப்பதாக தெரியவந்துள்ளது.
பிரான்சில் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் கஷ்டங்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதற்கான பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கங்களை உருவாக்கும் பணியில் பல ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் இருக்கிறார்களாம்.
மாலியைச் சேர்ந்த Gaye Sarambounou (41)இந்த விளையாட்டு அரங்கங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோரில் ஒருவர்.
கடந்த மூன்று மாதங்கள் நாளொன்றிற்கு 80 யூரோக்கள் ஊதியத்தில் 8 முதல் 11 மணி நேரம் வேலை செய்துவந்துள்ளார் Sarambounou.
image - Christophe Archambault, AFP
ஆனால், ஓவர்டைம் பார்ப்பதற்கு ஊதியம் வழங்கப்படுவதேயில்லை என்று கூறும் Sarambounou, என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனாலும், யாரும் அதைப்பற்றி பேசுவதில்லை என்கிறார்.
என்னுடைய நிலைமை அப்படி என்று கூறும் Sarambounou, உங்களிடம் ஆவணங்கள் இல்லையென்றால், நீங்கள் எல்லா கடினமான, மோசமான வேலைகளையும் செய்தாகவேண்டும். அதனால் வேறு வழியில்லாமல் எனக்குக் கொடுக்கப்படும் வேலைகளை ஏற்றுக்கொள்கிறென் என்கிறார்.
இன்னொரு பிரச்சினை
இதற்கிடையில், அடிக்கடி தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் சோதனைக்கு வருவார்களாம். கடந்த ஆண்டு, ஆவணங்களற்ற Sarambounou ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில் வேலை செய்வதை அறிந்து, அவரை வெளியே துரத்திவிட்டார்களாம் ஆய்வாளர்கள்.
இந்த அழகான விளையாட்டு அரங்கங்கள் அனைத்தும் துஷ்பிரயோகம் செய்யப்படும் ஏழைகளால் கட்டப்பட்டவை என்கிறார் மாலியிலிருந்து வந்துள்ள மற்றொரு ஆவணங்களற்ற பணியாளர். 80 சதவிகிதமும் இந்த வேலைகளைச் செய்வது புலம்பெயர்ந்தோர்தான். மாலி, போர்ச்சுகீஸ், துருக்கி நாட்டவர்கள்தான் இந்த வேலைகளைச் செய்வது. பிரான்ஸ் நாட்டவர்கள், அலுவலகங்களில் மட்டும் வேலை செய்கிறார்கள் என்கிறார் அவர்.
இந்த ஆவணங்களற்ற பணியாளர்களுக்கு வேண்டியதெல்லாம் வேலை செய்ய அனுமதிக்கும் ஆவணங்கள். அப்படி ஆவணங்கள் கிடைத்தால் எப்போது சிக்கிக்கொள்வோமோ, துரத்தப்படுவோமோ என்ற பயமில்லாமல் அவர்கள் சற்று நிம்மதியாக வேலை செய்யலாம், அவ்வளவுதான்!