70 மில்லியன் டொலருக்கு ஏலம் போன டிஜிட்டல் ஓவியம்! வாங்கியவர் யார்?
பிரித்தானியாவில் கையில் தொட்டுக்கூட உணரமுடியாத ஒரு டிஜிட்டல் ஓவியம் 69.3 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ள செய்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள Christie's எனும் ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில், Non-fungible token (NFT) எனும் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு டிஜிட்டல் ஓவியம் 69,346,250 அமெரிக்க டொலருக்கு ஏலம் போயுள்ளது.
நிஜத்தில் இல்லாத ஒரு டிஜிட்டல் கலைப்படைப்பு இவ்வளவு விலை கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறை.
அதேபோல், ஒரு கலைப்படைப்பு கிரிப்டோகரன்சி கொடுத்து வாங்கப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
இந்த ஓவியத்துக்கு Everydays -The First 5000 Days என தலைப்பிடப்பட்டுள்ளது. காரணம், இந்த டிஜிட்டல் கலைப்படைப்பு 13 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட 5,000 விவேகமான வண்ண படங்களில் கொலாஜ் (Collage) என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டிஜிட்டல் ஓவியத்தை, Beeple என அழைக்கப்படும் புகழ்பெற்ற அமெரிக்க படைப்பாளி Mike Winkelmann உருவாக்கியுள்ளார்.
இதனை, Metapurse நிறுவனர் Metakovan என்பவர் வாங்கியுள்ளார்.
இந்த கலைப்படைப்பின் அடுத்த விற்பனை மதிப்பு 1 பில்லியன் டொலர் எனக் கூறப்படுகிறது.