43 வயதிலும் மிரட்டல் பந்துவீச்சு.. அதிர வைத்த இலங்கை வீரர்
டில்ஹரா ஃபெர்னாண்டோ நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்
ஓய்வு பெற்ற வீரர்களுக்கான இந்த தொடரில் 43 வயதான ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும், முரளிதரன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்
லெஜெண்ட் லீக் தொடரில் டில்ஹரா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். கட்டாக்கில் மணிபால் டைகர்ஸ் மற்றும் பில்வாரா கிங்ஸ் அணிகள் மோதிய டி20 போட்டி நேற்று நடந்தது.
முதலில் ஆடிய மணிபால் அணி 8 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக டைபு 54 ஓட்டங்களும், ரைடர் 47 ஓட்டங்களும் எடுத்தனர்.
பில்வாரா அணி தரப்பில் பெஸ்ட் 3 விக்கெட்டுகளையும், யூசுப் பதான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய பில்வாரா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்து 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
அபாரமாக பந்துவீசிய டில்ஹரா ஃபெர்னாண்டோ 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஹர்பஜன் சிங், அவனா தலா இரண்டு விக்கெட்டுகளும், முத்தையா முரளிதரன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
LLC Twitter