கடைக்கு சென்று இட்லி கூட சாப்பிட முடியலன்னு ஆதங்கப்பட்டவர்.. பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர்: யார் இவர்?
இந்தியாவின் மிகப் பெரிய பார்மாசூட்டிகல் கம்பெனியாக இருக்கும் சன் பார்மா நிறுவனத்தை உருவாக்கியவர் பற்றி தான் பார்க்க போகிறோம்.
யார் இவர்?
சன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் திலீப் சங்வி (Dilip Shanghvi) . இவர் நாட்டின் 8 -வது பணக்காரராகவும், உலகளவில் 87 -வது பணக்காரராகவும் உள்ளார். இவர், சன் பார்மா சாம்ராஜ்ஜியத்தை 5.4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளார்.
இத்தனை சாதனை படைத்த சங்விக்கு விளம்பரம் மீது ஆசையில்லை. அவரது சுயசரிதையை எழுதிய சோமா தாஸிடம், தன்னிடம் உள்ள செல்வத்துடன் தொடர்பு செய்வதால் உண்டாகும் பிரபலம் சங்கோஜத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார். மேலும், ஒரு கடைக்கு சென்று நிம்மதியாக இட்லி சாப்பிட முடியவில்லை என்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.
இவர், பவானிப்பூர் கல்லூரியில் காமர்சில் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்துள்ளார். 1982-ம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு பார்மாசூட்டிகல் டிஸ்ட்ரிபியூட்டராக இருந்த தனது தந்தையிடமிருந்து ரூ.1000 கடனாக பெற்று மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.தற்போது, 100 -க்கும் மேற்பட்ட நாடுகளில் சன்பார்மா இயங்குகிறது.
கையகப்படுத்துதல்
Dilip Shanghvi, 1997 -ம் ஆண்டு அமெரிக்காவின் டெட்ராய்ட்டை சேர்ந்த Caraco Pharma என்ற நிறுவனத்தை வாங்கியது பெரும் உதவியாக இருந்துள்ளது. பின்னர், இஸ்ரேலைச் சேர்ந்த Taro Pharma-வையும், போட்டி நிறுவனமான ரான்பாக்ஸி லேபாரேட்டரீஸ் நிறுவனத்தையும் அடுத்தடுத்து வாங்கினார்.
இதன்பின்னர், 2023-ல் அமெரிக்காவின் மசாசூசெட்ஸை சேர்ந்த Concert Pharmaceuticals நிறுவனத்தை 576 மில்லியன் டொலருக்கு கையகப்படுத்தியதன் மூலம் சன் பார்மா வலுவானது. இருப்பினும், 2014 முதல் 2018 ல் நெருக்கடிகளை சந்தித்த போதும் மீண்டெழுந்தது.
2018 நிதியாண்டில் ரூ.26,065.9 கோடியில் இருந்த சன் பர்மாவின் வருவாய் ரூ.43,278.9 கோடியாக உயர்ந்தது. போர்ப்ஸ் மதிப்பின் படி சங்வி மற்றும் அவரது குடும்பத்தினரின் நிகர சொத்து மதிப்பு 19 பில்லியன் டொலர்களாகும்.
இதில், Dilip Shanghvi -யின் நிகர மதிப்பு 18.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ.15.65 லட்சம் கோடி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |