அறிமுக போட்டியில் விளையாடிய இலங்கை வீரருக்கு காயம்..மருத்துவ அறிக்கைக்கு காத்திருப்பு என அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்காவுக்கு பீல்டிங்கின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
ஒருநாள் போட்டியில் அறிமுகம்
கவுகாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
இலங்கை அணியில் 22 வயதான தில்ஷன் மதுஷன்கா இந்தப் போட்டியில் அறிமுகமானார். ஆறு ஓவர்கள் வீசிய அவர், 83 ஓட்டங்கள் விளாசிய ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
@BCCI
பீல்டிங்கின்போது காயம்
ஆனால் அவர் பீல்டிங்கின்போது அவுட்ஃபீல்டில் டைவ் செய்தபோது வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு X-ray மற்றும் MRI எடுக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் அவரது எதிர்கால நடவடிக்கை குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
?Team Updates: #INDvSL
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) January 11, 2023
? Dilshan Madushanka dislocated his right shoulder while diving in the outfield during the 1st ODI. He was sent for an X-ray and MRI. Upon receiving the said reports, the team management will decide on the future course of action. pic.twitter.com/NXJewCn0vA