நடிகர் சிவகார்த்திகேயன் விவகாரத்தில் முதன்முறையாக மனம் திறந்து பேசிய டி.இமான்
நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து இசையமைப்பாளர் டி.இமான் சொன்ன விடயம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அதுகுறித்து முதல் முறையாக டி.இமான் மனம் திறந்து பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன் விவகாரம்
இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர் செய்ததை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திரையுலகில் பலரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், டி.இமானுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இமான் கூறியது
இந்த நிலையில், சமீபத்தில் படபூஜை ஒன்றில் கலந்து கொண்ட இமானிடம் இந்தப் பிரச்சினைக்குப் பதில் கொடுத்து முற்றுப்புள்ளி வையுங்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு இமான் “இதில் முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒன்றும் இல்லை. சரி, தவறு எது என்பது மனிதர்களைத் தாண்டி இறைவனுக்கு தெரியும் என்பதை நம்புவன் நான்.
இது எல்லாவற்றிற்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |