இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய இலங்கை கேப்டன்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலும் இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே அரைசதம் விளாசினார்.
வெல்லிங்டன் டெஸ்ட்
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. நேற்றைய ஸ்கோர் 26-2 உடன் களமிறங்கிய இலங்கை அணி 164 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பொறுப்புடன் இறுதிவரை போராடிய இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே 89 ஓட்டங்கள் விளாசினார். இலங்கை அணி பாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஒஷாட பெர்னாண்டோ 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கருணரத்னே 34வது அரைசதம்
அதன் பின்னர் திமுத் கருணரத்னே - குசால் மெண்டிஸ் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் கருணரத்னே தனது 34வது அரைசதத்தை பதிவு செய்தார்.
Second fifty of this Test match for Dimuth Karunaratne!#NZvSL pic.twitter.com/3gymrmZnKd
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 19, 2023
மொத்தம் 83 பந்துகளை எதிர்கொண்ட அவர், 4 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மெண்டிஸ் அரை சதம் அடித்தார்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
மெண்டிஸ் 50 ஓட்டங்களுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளது. இலங்கை அணிக்கு இன்னும் 303 ஓட்டங்கள் தேவை.