அம்பயரை பதம் பார்த்த இலங்கை கேப்டன் திமுத் எறிந்த த்ரோ! வைரலாகும் காணொளி
மிர்பூரில் நடந்து வரும் வங்க தேச அணிக்கு எதரான 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி கேப்டன் திமுத் கருணாரத்ன எறிந்த பந்து அம்பயர் மீது தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வங்க தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், நேற்று இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் மிர்பூரில் தொடங்கியது.
டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த வங்க தேச அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்து.
இன்று இரண்டாவது நாள் தொடர்ந்து விளையாடிய வங்க தேச அணி 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, முஷ்பிகுர் ரஹீம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்தார்.
இலங்கை தரப்பில் பந்து வீச்சில் கசுன் ரஜிதா 5 விக்கெட்டுகளையும், அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இரண்டாவது நாள் வங்க தேசத்தின் முதல் இன்னிங்ஸில் போது இலங்கை அணி கேப்டன் திமுத் கருணாரத்ன எறிந்த பந்து அம்பயர் மீது தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை வீரர் அசித்த பெர்னாண்டோ வீசிய 102வது ஓவரில் கடைசி பந்திலே இச்சம்பவம் நடந்தது.
உக்ரைனில் ராணுவத்தளம் அமைக்கும் ரஷ்யா!
அசித்த வீசிய பந்தை விளாசிய முஷ்பிகுர் ரஹீம் ரன் எடுக்க ஓடினார், அப்போது பந்தை பிடித்த திமுத், பந்து வீச்சாளர் பக்கம் இருக்கும் ஸ்டம்பை நோக்கி வேகமாக பந்தை எறிந்தார்.
— cric fun (@cric12222) May 24, 2022
எனினும், பந்து ஸ்டம்பிற்கு அருகே இருந்த அம்பயர் ஷர்ஃபதுல்லாவின் வலது காலில் பலமாக தாக்கியது.
உடனே பந்து வீச்சாளர் அசித்த அம்பயரிடம் சென்று நலம் விசாரித்தார்.
அதற்கு தான் நலமாக இருப்பதாக அசித்தவிடம் ஷர்ஃபதுல்லா தெரிவித்தார். குறித்த சம்பவத்தின் காணொளி இணைத்தில் வைரலாகியுள்ளது.