இலங்கை மக்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்! உருக்கத்துடன் பேசிய கேப்டன்
வங்கதேசத்திற்கு எதிரான வெற்றியை இலங்கை மக்களுக்கு சமர்ப்பிப்பதாக இலங்கை கேப்டன் கருணரத்னே தெரிவித்துள்ளார்.
டாக்காவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கை பந்துவீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆட்டநாயகன் விருதையும், ஏஞ்சலோ மேத்யூஸ் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினர்.
போட்டி முடிந்ததும் பேசிய இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே, இலங்கை மக்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்க விரும்புகிறேன். கடினமான சூழலில் இருக்கும் எங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியானது, அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியை கொண்டு வரும்' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: Reuters
திமுத் கருணாரத்னே இரண்டு டெஸ்ட் போட்டிகளில், இரண்டு அரைசதம் உட்பட 148 எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.