அரையிறுதியில் பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் என என் இதயம் சொல்கிறது! பொய்த்து போன இலங்கை கேப்டன் கணிப்பு
நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி தொடர்பாக இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னேவின் கணிப்பு பொய்யாகி போனது.
டி20 உலகக்கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து உலகக்கோப்பை சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது.
My heart says @TheRealPCB will win the match…..#PAKvAUS #T20WorldCup #T20WorldCup21
— Dimuth Karunarathna (@IamDimuth) November 11, 2021
இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் இலங்கை அணியின் டெஸ்ட் கேப்டன் திமுத் கருணரத்னே டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் தான் வெற்றி பெறும் என தனது இதயம் சொல்கிறது என அவர் பதிவிட்டார். இந்த பதிவானது கிட்டத்தட்ட பத்தாரயிரம் லைக்குகளை நெருங்கி வைரலானது.
ஆனால் துரதிஷ்டவசமாக திமுத் சொன்னது பொய்த்து போய் அவுஸ்திரேயாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்துள்ளது.