என்னவொரு ஆட்டம்! இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த வீரர்..மிரண்டுபோன இலங்கை கேப்டன்
இந்திய அணிக்கு எதிராக 140 ஓட்டங்கள் விளாசிய மைக்கேல் பிரேஸ்வெலை இலங்கை அணியின் கேப்டன் பாராட்டியுள்ளார்.
கில் - பிரேஸ்வெல்
ஐதராபாத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் கில் 208 ஓட்டங்கள் குவித்தார். அதேபோல் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து, தோல்வி பயத்தை காட்டியவர் நியூசிலாந்தின் ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல்.
அவர் 78 பந்துகளில் 10 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 140 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் 7வது வரிசையில் களமிறங்கி அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
@BCCI
பிரேஸ்வெலின் ஆட்டத்தை பார்த்து மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர்.
இலங்கை கேப்டனின் பாராட்டு
இந்த நிலையில் பிரேஸ்வெலின் மிரட்டலான ஆட்டத்தை இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே வியந்து பாராட்டியுள்ளார்.
அவரது வெளியிட்ட பதிவில், 'என்னவொரு ஆட்டம்.. மிகச் சிறப்பாக விளையாடினீர்கள் பிரேஸ்வெல்.. உண்மையில் அற்புதமாக விளையாடியிருக்கிறீர்கள்' என தெரிவித்துள்ளார்.
What a match..?
— Dimuth Karunarathna (@IamDimuth) January 18, 2023
Well played Bracewell..Really well played man.#INDvNZ