அதிகபட்ச பாதுகாப்பு அளித்த பாகிஸ்தான் அரசுக்கு நன்றி! இலங்கை வீரரின் வீடியோவுக்கு பாகிஸ்தானியர்கள் ஆதரவு
ஆசியக்கோப்பையில் விளையாட வந்த தங்கள் அணியினருக்கு பாதுகாப்பு அளித்ததற்கு, பாகிஸ்தான் அரசுக்கு நன்றி என இலங்கையின் திமுத் கருணரத்னே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடைசி போட்டி
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று பாகிஸ்தானில் கடைசி போட்டி நடந்தது.
இனி நடக்கவிருக்கும் ஏனைய போட்டிகள் அனைத்தும் இலங்கையில் மட்டுமே நடைபெற உள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இதுவே இலங்கை அணி பாகிஸ்தானில் இந்தத் தொடரில் விளையாடும் கடைசி போட்டி ஆகும். வரும் 9ஆம் திகதி, இலங்கையின் கொழும்பில் நடைபெற உள்ள போட்டியில் வங்கதேசத்தை அடுத்ததாக இலங்கை சந்திக்கிறது.
திமுத் கருணரத்னே நன்றி
இந்த நிலையில், பாகிஸ்தானில் தங்களுக்கு பாதுகாப்பு அளித்த அரசுக்கு நன்றி என இலங்கை வீரர் திமுத் கருணரத்னே வீடியோ பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், 'லாகூரில் நாங்கள் சிறிது காலம் தங்கியதற்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் பாகிஸ்தான் அரசு மற்றும் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.
Thank you Pakistan Government & @TheRealPCB for providing maximum security for our short stay in Lahore ?#AsiaCup23 pic.twitter.com/xf3RFXkuCc
— Dimuth Karunarathna (@IamDimuth) September 7, 2023
திமுத் கருணரத்னேவின் இந்த பதிவுக்கு பாகிஸ்தானியர்கள் ஆதரவு அளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அவர்களது பதிவுகளில் எப்போதும் வரவேற்கிறோம் என்றும், சகோதரருக்கு நன்றி என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.
2009ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் சென்ற பேருந்து மீது லாகூரில் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Livemint
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |