ரோகித் சர்மாவுக்கு தான் ஆட்டநாயகன் விருது கிடைக்கும்! முன்னரே கணித்து கூறிய இலங்கை அணி கேப்டன் கருணரத்னே... வைரலாகும் பதிவு
ஓவல் டெஸ்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இலங்கை அணி கேப்டன் திமுத் கருணரத்னே, ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என முன்னரே கணித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் 127 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருதுக்கான வீரர் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர், ஓவல் டெஸ்டில் நீங்கள் யாரை ஆட்டநாயகனாக தேர்வு செய்வீர்கள் என சமூகவலைதளத்தில் கேள்வி கேட்கப்பட்டது.
No Doubt…….
— ?????? ???????????? (@IamDimuth) September 6, 2021
Indian bowlers are the Best at the moment…..?
What a comeback @BCCI and I really enjoyed the whole match…..
Test is Best….????#INDvsEND #ENGvIND
அதற்கு ரோகித் சர்மா தான் என இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் திமுத் கருணரத்னே தனது விருப்பத்தை கூறினார். அவர் கணித்தபடியே ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
திமுத் கருணரத்னேவின் மற்றொரு பதிவில், டவுட்டே இல்லை, இந்த தருணத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறந்தவர்கள். என்ன ஒரு அருமையான கம்பேக்! நான் முழு போட்டியை மிகவும் ரசித்தேன் என பதிவிட்டுள்ளார். திமுத் கருணரத்னேவின் இந்த பதிவுகள் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
ஈகோ இல்லாத ஜெண்டில்மேன்கள் இலங்கை வீரர்கள் என ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர்.
@ImRo45 ??
— ?????? ???????????? (@IamDimuth) September 6, 2021