மனைவி மற்றும் தந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்!
மனைவி மற்றும் குடும்பத்தாருடன் இருக்கும் அழகான புகைப்படத்தை இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சண்டிமால் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3698 ரன்களை குவித்துள்ளவர் சண்டிமால். இவர் 62 டெஸ்ட் போட்டிகளிலும், 57 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் சேர்த்து மொத்தமாக 15 சதங்களை அவர் விளாசியுள்ளார்.
இந்த நிலையில் இன்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து மனைவி, தந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை சண்டிமால் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், உலகில் உள்ள தந்தைகள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Happy Father’s Day to all our father’s in the world ?❤️ pic.twitter.com/ozUDKqyYfS
— dinesh chandimal (@chandi_17) June 20, 2021