இரண்டாவது இன்னிங்சிலும் அரைசதம்! நம்பிக்கை நட்சத்திரமாக மிரட்டும் இலங்கை வீரர்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில், இலங்கை வீரர் தினேஷ் சண்டிமல் அரைசதம் விளாசியுள்ளார்.
காலேவில் நடந்து வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 250 ஓட்டங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.
ஒஷாட பெர்னாண்டோ 64 ஓட்டங்களும், குசால் மெண்டிஸ் 76 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், தினேஷ் சண்டிமல் நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 76 ஓட்டங்கள் எடுத்த அவர், இரண்டாவது இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார்.
zeenews
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இரட்டை சதம் விளாசிய சண்டிமல், பாகிஸ்தானுக்கு எதிராகவும் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் உருவெடுத்துள்ளார்.
Twitter (@OfficialSLC)