கடைசி வரை களத்தில் நின்றும் சதத்தை தவறவிட்ட தினேஷ் சண்டிமல்! இலங்கை நிர்ணயித்த இலக்கு
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 342 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் தொடங்கியது. இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 222 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 218 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி ஒஷாட பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், தினேஷ் சண்டிமல் ஆகியோரின் அரைசதத்தினால் 337 ஓட்டங்கள் குவித்தது.
espncricinfo
அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தினேஷ் சண்டிமல் சதத்தை நோக்கி விளையாடிக் கொண்டிருந்த அவர், 94 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது எதிர்முனையில் பிரபத் ஜெயசூரியா ஆட்டமிழக்க இலங்கையின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இதனால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சண்டிமல் சதத்தை தவறவிட்டார். அதன் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
Yet another brilliant knock by Dinesh Chandimal! ?#SLvPAK pic.twitter.com/imcSyvZ6Ko
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 19, 2022