காலி டெஸ்டில் முன்னெச்சரிக்கையாக பாதியில் விலகிய தினேஷ் சந்திமால்: மாற்றாக இளம் வீரர்
Dinesh Chandimal concussion in galle test: காலி டெஸ்டில் ஃபீல்டிங்கின்போது காயமுற்றதால் இலங்கையின் மூத்த வீரரான தினேஷ் சந்திமால் பாதியில் விலகினார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கையின் தினேஷ் சந்திமால் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.
தினேஷ் சந்திமால்
காலியில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில், இலங்கையின் தினேஷ் சந்திமால் (Dinesh Chandimal) பவுண்டரியைத் தடுக்க பாய்ந்து சென்றபோது தோள்பட்டை மற்றும் கழுத்தில் காயமடைந்தார்.
இதனால் பாதியில் விலகிய அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்கேன் செய்ய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Concussion சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பதிலாக பசிந்து சூரியபண்டார (Pasindu Sooriyabandara) நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக Concussion மாற்று வீரராக பசிந்து சூரியபண்டாரா அணியில் இணைகிறார். ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அதில் உள் காயங்கள் ஏதுவுமில்லை என்பது தெரிய வந்தது" என தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |