வெற்றி ஷாட்களை அடித்தது எப்படி? சிக்சர் ரகசியத்தை உடைத்த தமிழன் தினேஷ் கார்த்திக்
இறுதி ஓவரில் அதிரடியாக சிக்சர், பவுண்டரியை விளாசி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது குறித்து தினேஷ் கார்த்திக் மனம் திறந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
கடந்த சில போட்டிகளில் தடுமாறிய தினேஷ் கார்த்திக் தான் எப்போதும் ஒரு தரமான பினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். தாம் வெற்றி ஷாட்களை அடித்தது எப்படி என்பது குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், நான் பேட்டிங் செய்ய களத்துக்கு வந்த போது பெரியதாக நாங்கள் பேசிக் கொள்ளவில்லை.
livehindustan
ரோகித் சர்மா என்னிடம் ஒரே ஒரு விஷயத்தை தான் கூறினார். கடைசி ஓவர் வீசும் சாம்ஸ் எந்த வகை பந்தை வீசுவார் என்பதை மட்டும் கூறினார். இதனை வைத்து அதை எப்படி எதிர்கொள்வது என்று நானே திட்டமிட்டேன்.
உள்ளபடியே வெற்றி ரன்களை அடித்தது நல்ல உணர்வாக இருக்கிறது.
இது போன்ற நெருக்கடியான போட்டியில் விளையாடுவது அவசியம் என கூறியுள்ளார்.