ஒரு வீரராக அவர் திறமை கொண்டவர் என நான் கருதவில்லை! மனதில் இருப்பதை பேசிய தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பாடு குறித்து பேசிய தினேஷ் கார்த்திக்.
ஒரு வீரராக சாஸ்திரி அவ்வளவாக திறமை கொண்டவர் என்று நான் கருதவில்லை என கூறும் தமிழக வீரர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் ரவி சாஸ்திரி பயிற்சியின் கீழ் விளையாடியது தொடர்பில் மனம் திறந்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஆடாத வீரர்களைக் கண்டால் ரவி சாஸ்திரி பொறுமை இழந்து விடுவார். அதே போல் வலைப்பயிற்சியில் ஒருமாதிரி ஆடிவிட்டு, மேட்சில் வேறு மாதிரி ஆடுபவர்களையும் சாஸ்திரிக்குப் பிடிக்காது.
தோல்வியடைந்தால் பொறுமை இழப்பார், வீரர்கள் தோல்வி அடைந்தாலும் பொறுமை காக்க மாட்டார். ஆனால் அனைவரையும் நன்றாக ஆட, சிறப்பாக ஆட ஊக்குவிப்பார்.
ஒரு வீரராக சாஸ்திரி அவ்வளவாக திறமை கொண்டவர் என்று நான் கருதவில்லை, ஆனால் பயிற்சியாளராக தன் திறமையை நிறைவு செய்தார் என்றே கூறுவேன்.
எதிர்பார்த்ததை விட அதிகமாகவே பங்காற்றினார் சாஸ்திரி.
வீரர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். வீரர்களின் முழு உழைப்பையும் வாங்க நினைப்பார் எனக் கூறியுள்ளார்.