என்னை மன்னிச்சுடுங்க... நான் அப்படி பேசியிருக்க கூடாது! மனைவியும், தாயும் சாடியதாக தினேஷ் கார்த்திக் வேதனை
இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக், சில நாட்களுக்கு முன்பு கமெண்ட்ரியின் போது, அடுத்தவர் மனைவி பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு தினேஷ் கார்த்திக் இப்போது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது, கமெண்ட்ரியாக உருவெடுத்த தினேஷ்கார்த்திக், அப்போது அவர் சொன்ன கமெண்ட்ரி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
குறிப்பாக, வெளிநாட்டு வர்ணனையாளர்களுக்கு அவர் தரும் ஒன்லைன் பன்ச், ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இதனால் தினேஷ் கார்த்திக்கின் கமெண்ட்ரிக்காக ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.
அதன் படி தற்போது தினேஷ் கார்த்திக், இங்கிலாந்துக்கு எதிரான பெண்கள் அணி போட்டிக்கும், இப்போது இலங்கை தொடருக்கும் வர்ணனை செய்து வருகிறார். அதன் படி இங்கிலாந்து-இலங்கை இடையே நடந்த 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தினேஷ் கார்த்திக், கிரிக்கெட் வீரர்களின் பேட் குறித்து கூறினார்.
Dinesh Karthik clearly not keen to have his Sky contract renewed ... pic.twitter.com/SYbEKH0Sae
— Jason Mellor (@jmelloruk1) July 1, 2021
அதில், எந்த ஒரு பேட்ஸ்மெனுக்கும் தங்கள் வைத்திருக்கும் பேட்களை விட, அடுத்த வீரர் வைத்திருக்கும் பேட்களைத்தான் பெரிதும் விரும்புகிறார்கள். பேட்கள் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி போல, நம்மிடம் இருப்பதை விட அடுத்தவரிடம் இருப்பது தான் சிறப்பாக தெரியும்.
அது போன்று, தம்மிடம் உள்ள பேட்களை விட, அடுத்தவர்களிடம் உள்ள பேட்களைத் தான் பேட்ஸ்மேன்கள் விரும்புவார்கள் என்று வழக்கம் போல் ஒரு காமெடியாக பேசினார்.
ஆனால், இது ரசிகர்கள் சிலருக்கு பிடிக்காத காரணத்தினால் பெரும் சர்ச்சை உருவானது. இந்நிலையில், இது குறித்து தினேஷ் கார்த்திக், நான் பேசிய பேச்சுக்கு இப்போது அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
உண்மையில் எந்த உள்நோக்கத்துடன் அப்படி பேசவில்லை. ஆனால், அவ்வாறு பேசியது தவறுதான். ஒவ்வொருவரிடமும் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன்.
நிச்சயமாக அந்த வார்த்தை சரியானது அல்ல. இதுபோல் மறுபடியும் நடக்காது. நான் இப்படி பேசியதற்காக என் மனைவியும், அம்மாவும் கடுமையாக சாடியதாக கூறியுள்ளார்.